• சிறப்பம்சங்கள்

  சிவபெருமானின் 64 விதமான வடிவங்களில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்.
  ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.
 • சிறப்பம்சங்கள்

  உலகிலேயே வேறு எங்கும் காணாத புதுமையாய் அர்த்தநாரீஸ்வரரின் அர்ச்சனையின் போது ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்சிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பு.
 • சிறப்பம்சங்கள்

  பீடமே இல்லாமல் மூலவர் சிலை அமைந்திருப்பது வேறெங்கும் காணவியலாக் காட்சியாகும்.
  முக்கால் உடைய முனிவர் பிரிங்கி மகரிஷியின் அருள் சக்தி நிரம்பியுள்ளதலம்.
 • சிறப்பம்சங்கள்

  சுமார் 350 ஏக்கர் நிலப்பரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத் தெய்வ திருமலையானது கோவில் அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது.
 • சிறப்பம்சங்கள்

  ஒவ்வொரு கிரகணத்தின் போதும் மற்ற ஸ்தலங்கள் (கோவில்கள்) அனைத்தும் மூடப்பட்டு பின்பு கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். ஆனால் இங்கு கிரகணத்தின் போது கோவில் மூடப்படமாட்டாது.
 • சிறப்பம்சங்கள்

  திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலை பிடித்தபடியும் உள்ளது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
 • சிறப்பம்சங்கள்

  அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள கல்லால் ஆன வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். .
 • சிறப்பம்சங்கள்

  ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
  மாதொருபாகனின் திருமேனி முழவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.


Past Important News

   

Past Important Video Clips