குறுந்தகடு (DVD) உருவாக்கம்
 
Web Page
உலகிலேயே இறைவன் ஆண்பாதி பெண்பாதி உருவான அர்த்தநாரீஸ்வராக அருள்பாளிப்பது இங்கு உள்ள திருச்செங்கோட்டில் மட்டுமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது திருச்செங்கோட்டின் பெருமைகளையும், திருமலையின் சிறப்புகளையும் மற்றும் திருமலையில் ஆண்டிற்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடைபெறும் பிரமோற்சவம் என்று அழைக்கப்படும் 14 நாட்கள் வைகாசி விசாகம் நிகழ்சிகளையும் உலக மக்களுக்கு மட்டும் அல்லாமல் நமது திருச்செங்கோட்டு மக்களுக்கும் முழுமையாக தெரியப்படுத்தும் முயற்சியே இந்த குறும்பட (DVD) உருவாக்கம் ஆகும். திருச்செங்கோடு வரலாற்றிலேயே முதன் முதலாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 3 மணி நேரம் பார்க்கும் வகையில் இந்த DVDயை வழங்கியுள்ளோம். உமையொருபாகனை பற்றியும் மற்றும் வைகாசி விசாகத்தை பற்றியும் இன்றுவரை தாங்கள் அறிந்திராத எண்ணற்ற அரிய தகவல்களை முழுமையாக இந்த குறும்படத்தில் கண்டு மகிழலாம்.
குறுந்தகட்டின் சிறப்புகள்
 
இங்கு ஆண்டுதோறும் வைகாசிமாதம் மிகப்பிரமான்டமாக நடைபெறும் வைகாசி விசாகம் பற்றி நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். வைகாசி விசாகம் என்றதும் உடனே நம் நினைவிற்கு வருவது திருமலையில் முதல் நாள் நடைபெறும் கொடியேற்றம் நிகழ்ச்சியும், நான்காம் திருவிழா நிகழ்ச்சியும், தேர் இழுத்தல் மற்றும் இறுதிநாள் நிகழ்சியான சாமி மலைக்கு செல்வது மட்டும் ஆகும். ஆனால் இதற்கு இடைப்பட்ட நாட்களின் நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளை பற்றி இன்றைய தலைமுறையினர் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தெரிவதில்லை. அதேபோல் வைகாசி விசாகத்தின் பொழுது நடைபெறும் 14 நாட்கள் நிகழ்ச்சிகளையும் முழுமையாக காண்பதற்கான நமக்கு நேரமின்மையும் இதற்கான முக்கிய காரணமாகும்.
குறுந்தகட்டிள் உள்ள நிகழ்ச்சிகள்
 
இத்தகைய தகவல்கள் அனைத்துமே நமது இணையதளத்தில் இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அனைத்து மக்களாலும் அதனை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற நமது மக்களின் மனக்குறையை போக்கும் வண்ணமே இந்த இனையதளத்தின் சார்பாக மிகச் சிரமங்களுக்கு இடையில் உருவானதே இந்த குறும்படமாகும். இரண்டு பகுதிகளாக உள்ள இந்த குறும்படத்தில் முதல் பகுதியில் பெருமை மிக்க திருச்செங்கோடு நகரைப் பற்றியும், திருமலையை பற்றியும், சிறப்பு மிக்க இறைவனைப் பற்றியும், திருமலையில் உள்ள கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் திருமலையில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களைப் பற்றியும் முழுமையாக கொடுத்துள்ளோம். அதேபோல் இரண்டாம் பகுதியில் பிரமோற்சவம் என்று அழைக்கப்படும் 14 நாட்கள் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகளையும் முழுமையாக வழங்கியுள்ளோம்.