காலண்டர் பதிப்புகள்
 

காலண்டர் பதிப்புகள்

உலகிலேயே பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருப்பதி, பழனி மற்றும் பல்வேறு தலங்களுக்கு செல்லும்போது அந்த அந்த ஸ்தல மூர்த்திகளின் திருவுருவம் பொறிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காலண்டர்கள் கிடைப்பதை பார்த்திருக்கிறோம். அதுபோல நமது திருச்செங்கோட்டிற்கு இதுவரை இல்லையே என்ற நமது மக்களின் மனக்குறையை போக்கும் வண்ணம் இந்த இணையதளத்தின் சார்பாக தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சியே அர்த்தநாரீஸ்வரரின் உருவம் பதித்த காலண்டர் வெளியீட்டின் காரணம் ஆகும். 2009 ஆம் ஆண்டு முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த முயற்சியை முழுமையாக மக்களை சென்றடைய எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். .