இணையதள உருவாக்கம்
 
உலகிலேயே இறைவன் ஆண்பாதி பெண்பாதி உருவான அர்த்தநாரீஸ்வராக அருள் பாளிப்பது நமது திருச்செங்கோட்டில் மட்டுமே . வெங்கடாசலபதி என்றால் திருப்பதியும். முருகன் என்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியும் நம் மனதில் தோன்றுவதைப் போல் அர்த்தநாரீஸ்வரர் என்று சொன்ன உடனேயே நம் மனதில் தோன்றுவது இந்த திருச்செங்கோட்டில் உள்ள திருத்தலமே ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் திருதலத்தின் பெருமைகளையும் நமது இறைவனின் சிறப்புகளையும் உலக மக்களுக்கு தெரியப்படுத்த இன்று வரை நம்மிடையே எந்தவொரு தகவல் களஞ்சியமும் இல்லை என்ற நமது திருச்செங்கோட்டு மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக திருச்செங்கோடு வரலாற்றிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட சிறிய முயற்சியே இந்த இனையதளமாகும்.

இந்த இணையதளத்தின் மூலம் நமது திருச்செங்கோட்டை பற்றியும் திருக்கோயிலைப் பற்றியும் சிதறி கிடக்கும் ஏராளமான அறிய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் ஓருங்கிணைக்கப்பட்டு உலகம் அறிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பல்வேறு வரலாற்று நூல்கள் மற்றும் ஆராய்ச்சி தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவகையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக மக்களின் முழு ஆதரவுடன் உபயோகத்தில் இருக்கும் இந்த இணையதளத்தை இதுவரை இறைபணி சேவையாக மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த இணையத்தளம் முழுமையடைய கடந்த பல ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து நண்பர்கள் மற்றும் பெரியோர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இணையத்தளம் மேலும் சிறப்படைய தங்களிடம் ஏதேனும் அறிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வரலாற்று சுவடுகள் இருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
இணையதளத்தின் சிறப்பம்சங்கள்
 
முதன் முதலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அர்த்தநாரீஸ்வரரை பற்றிய முழுமையான செய்திகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் உள்ள கோயில்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் தொகுப்பு வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.
நம் திருத்தலத்தில் பக்திப் பாடல்களை எளிதில் பதிவிறக்கம் செய்யும் வசதி.
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்யாமல் காணும் வசதி.