108 சங்குகள் அபிஷேகம் மற்றும் படிபூஜை
 
23-08-2015 ஞாயிறு அன்று காலை திருச்செங்கோடு மாதொருபாகன் இறைபணிமன்றத்தினரால் திருச்செங்கோடு திருமலையில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகளுக்கு 108 சங்குகள் அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து நண்பலில் அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலயத்தின் அருகில் உள்ள முதல் படியில் இருந்து திருமலையில் உள்ள அனைத்து திருப்படிகளுக்கும் படிவழிபாடு நடைபெற்றது . இதே தினத்தில் மாலையில் மலைமேல் நாகேஸ்வரர் வழிபாட்டுக் குழுவினரால் ஆண்டிற்கு ஒருமுறைநடத்தப்படும் 1008 கலசாபிஷேக பூஜை நாகேஸ்வரருக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது .

அன்று மாலையில் இதுவரை திருச்செங்கோட்டிலேயே இல்லாதவாறு மிக கனமழை பொழிந்தது. திருமலையின் படிகளில் நீர்வீழ்ச்சிபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பக்தர்களை மகிழ்வித்தது. அதற்குப்பின் திருச்செங்கோட்டிற்கு தொடர்ச்சியான நல்ல மழைப்பொழிவு கிட்டி நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. திருச்செங்கோடு வரலாற்றில் இச்சம்பவம் ஒரு அதிசய நிகழ்வாக பக்தர்களால் போற்றப்படுகிறது.