முத்துக்குமாரசுவாமி ஆலய கும்பாபிஷேகம்
 
திருச்செங்கோடு நகரில் பெரியமாரியம்மன் கோவிலுக்கு அருகே செங்குந்தர் பாவடி பஞ்சாயத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட முத்துக்குமாரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 22-11-2015 ஞாயிறு அன்று காலை செங்குந்தர் பாவடி பஞ்சாயத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்குமுன் இந்த ஆலயம் புதுப்பித்துக் கட்டி கும்பாபிபேஷகம் செய்யப்பட்டபின்பு இப்போது இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இங்கு மாதாமாதம் கிருத்திகை மற்றும் சஷ்டி நாட்களிலும் திருக்கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலையும் திருஞானசம்பந்தர் பக்த ஜனசபையின் சார்பாக பக்திப்பாடல்கள், பஜனை பாடி வழிபாடு நடத்தப்படும். பெரியமாரியம்மன் பண்டிகை நடைபெறும் தினத்தில் இங்கும் பண்டிகை நடத்தப்படும்.