தங்கத்தேர் பற்றிய புகைப்படங்கள்
தங்கத்தேர்
 

நீண்ட காலமாகவே திருச்செங்கோடு வாழ் பொதுமக்கள் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு தங்கத்தேர் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து அரசுக்கு வைத்து வரவே. அரசு 2008-ஆம் ஆண்டு தங்கத்தேர் செய்ய அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு உபயதாரர்கள் மூலம் நன்கொடைகள் தீட்டப்பட்டன. தங்கத்தேர் செய்யும் பணி 2008 ஆம் ஆண்டு துவங்கி 2009 ஆம் ஆண்டில் ஒரு வருட காலத்தில் சுமார் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தின் 39 வது தங்கத்தேர் திருச்செங்கோடு தங்கத்தேர் ஆகும்.

இத்தங்கத்தேர் உருவாக 11 கிலோ தங்கம். 35 கிலோ வெள்ளி. 394 கிலோ செம்பு. 3.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்குமரம் பயன்படுத்தப்பட்டு. 40 மரவேலை. பொன்வேலை செய்யும்; நிபுணர்களை கொண்டு தங்கத்தேர் உருவாக்கி உள்ளனர். தங்கத்தேர் 11.75 அடி உயரமும். 6.50 அடி நீளமும் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.

இந்த தங்கத்தேரில் உலருவருவதற்கு வசதியாக 90 ஆயிரம் ரூபாய் செலவில் பஞ்சலோக அர்த்தநாரீ்ஸ்வரர் உற்சவர்சிலையும். அதற்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வைரகிரிடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வைரகிரிடம்
 
தங்கத்தேரில் உலாவரும் அர்த்தநாரிஸ்வர் உற்சவ மூர்த்திக்கு திருச்செங்கோடு அணைத்து மோட்டர் தொழில் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் வைரகிரிடம் உபயமாக அணிவிக்கப்பட்டது. இந்த வைரகிரிடத்தில் 789 (20 கேரட்) வைர கற்கள், 330 கிராம் தங்கம், 198 முத்து மற்றும் பச்சை கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு அர்த்தநாரிஸ்வரரின் கம்பீரத்தன்மையை குறிக்கும் வகையில் சற்று சாய்வான நிலையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு
 
தங்கத்தேர் குடமுழுக்கு விழா 22.11.2009 தேதியில் காலை 7.30 மணிக்கு . கைலாசநாதர் ஆலயத்தில் யாகங்கள் வளர்க்கப்பட்டு பெரிய தேர் அருகே உள்ள மண்டபத்தில் தேருக்கு குடழுக்கு சிறப்பாக நடைபெற்றது, விழாவையொட்டி திருச்செங்கோடு நான்கு ரத வீதியில் மாவிலை. குருத்தோலை. தோரணங்கள். கரும்பு. வாழை மரங்கள் வழி நெடுகிலும் கட்டப்பட்டு தெரு முழுவதும் மாக்கோலம் போட்டு திருச்செங்கோடு நகரே விழாக்கோலம் பூண்டு. வரலாறு காணாத மக்கள் வெள்ளம் திரண்டனர்.
வெள்ளோட்ட விழா
 
திருச்செங்கோடு வரலாற்றில் முதன்முறையாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் ஓடுவதற்கு வசதியாக மலைக்கோவிலில் 7.50 லட்சம் ரூபாய் செலவில் தங்க ரதப்பாதை அமைக்கபட்டடு . தங்கத்தேர் நிறுத்திவைக்க வசதியாக ரூ 6 லட்சம் செலவில் தனிப்பாதுகாப்பு அறையும் கட்டப்பட்டுள்ளது.

தங்கத்தேர் வெள்ளோட்ட விழா 22.11.2009 தேதி மாலை 6 மணிக்கு பெரியதேர் அருகே சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மத்திய. மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தங்கத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் யானைகள், குதிரைகள், ஓட்டகங்கள் ஊர்வலமாக வர ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பம்பை ஆட்டம், சிவபார்வதி நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம, மற்றும் வாண வேடிக்கைகள் கோலாகலமாக நடந்தது.
திருமலையில் தங்கத்தேர் உலா
 
26.02.2010 முதல் திருமலையில் மிகச்சிறப்பாக தங்கத்தேர் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை இழுக்கப்பட்டு வருகறது.
தங்கரத திருப்பணிக்காக உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களின் விபரங்கள்:
 
பொருள்கள் விபரங்கள்
தங்கம் 11 கிலோ
வெள்ளி 35 கிலோ
செப்பு தகடு 394 கிலோ
தேக்கு மரம் 90 கன அடி
வாகை மரம் 15 கன அடி
மற்றும் உபமூல கச்சாபொருள்கள்