கொங்கு ஏழு தலங்கள்
 
கொங்கு பகுதியில் புகழ்பெற்ற 7 சிவதலங்கள் கொங்கு ஏழு சிவதலங்கள் என போற்றப்படுகிறது. கொங்கு ஏழு தலங்கள் பின்வருமாறு

1) திருச்செங்கோடு
2) கரூர்
3) வெஞ்சமாங்கூடலூர்
4) பவானி
5) அவிநாசி
6) திருமுருகன்பூண்டி
7) கொடுமுடி
மேற்கண்ட ஏழு தலங்களில் ஆறு தலங்கள் சமவெளி பகுதியில் அமைந்துள்ளது, திருச்செங்கோடு மட்டுமே மலைமீது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது வெகு சிறப்பாக கருதப்படுகிறது. பெரும்பாலும் மகாசிவராத்திரி அன்று இரவில் இந்த ஏழு சிவதலங்களையும் தரிசிப்பது மக்களின் வழக்கமாக இருக்கிறது.
சுற்றுலா தகவல்கள்
 
திருச்செங்கோட்டை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் காணப்படுகிறது. அவற்றில் சில முக்கியமானவை:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
கொங்கேழ் சிவதலங்கள்
கொல்லிமலை அறப்பளீசுவரர் ஆலயம்
ஜேடர்பாளையம் தடுப்பணை
மோகனூர் நவலடியான் கோவில்
காந்தி ஆசிரமம் புதுப்பாளையம்
சங்ககிரி மலைக்கோட்டை
பவானி கூடுதுறை - சங்கமேஸ்வரர் கோவில்
இறையமங்கலம் இளைய பெருமாள் கோவில்
1008 சிவாலயம் - Ariyanur, Salem Via
பட்லூர் நட்டாற்றீசன் கோயில் போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாகும்