பிரதோச மகிமை
 
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜன்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கி கொள்ளமுடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
அகிலலோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழும் பொருட்டு சிவபெருமான் ஆலாகால விஷத்தை உண்டு எல்லோரையும் காப்பாற்றினார் அந்த காலமே பிரதோஷ காலமாகும் . பரம்பொருளான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டு திருகையிலையில் அன்று மாலை 4-30 மணிமுதல் 6-00 மணிவரை பிரதோஷ வேளையில் தன் திரு முன்னிருந்த ரிஷப தேவரின் இருகொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காண திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதை கண்டு உளம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினர். அது முதல் திரியோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷகாலம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து லோக ஜீவராசிகளும் தேவர்களும் முப்பத்துமுக்கோடி தேவர்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, ஒன்று சேர்ந்து விரதமிருந்த நாள்தான் பிரதோஷ நாளாகும். வளர்பிறை, தேய்பிறை இரண்டு காலங்களிலும் வரும் திரியோதசி திதி அன்று நீராடி அன்று மாலை 4-30 மணி முதல் 6-00 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபடவேண்டும். தேய்பிறையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவன் அம்பிகையுடன் நந்தியின் கொம்புகளுக்கிடையே நடனமாட திருமால் மட்டுமே கண்டுகளிக்கின்றார். ஆனால் பெளர்ணமிக்கு முன்னால் வரும் பிரதோஷத்தன்று திருமாலுடன் சேர்ந்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை வழிபட இத்தலமான செங்குன்றம் வருகின்றனர். அனறு மாலை 4-30 மணிமுதல் 6-00 மணிக்குள் சிவனை வழிபடும் மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
பிரதோஷமன்று உபவாசமிருந்து தரிசனம் முடிப்பது நற்பலன்களை தரும். பிற என்பது பாவத்தையும் தோஷம் என்பது போக்கும் நேரம் எனவும் பொருள்படும்.

பிரதோஷகாலத்தில் சிவபெருமான் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கி கொள்கிறார். அதனால் பிரதோஷம் என்பது பரமேஸ்வரனை வழிபடுதலாகும். பொதுவாக பிரதோஷம் ஐந்து வகையுண்டு:
நித்தியபிரதோஷம்
பஷபிரதோஷம்
மாதபிரதோஷம்
மகாபிரதோஷம்
பிரளயபிரதோஷம் என்பன
பிரதோஷ வழிபாடு
 
ஒவ்வொரு பிரதோஷத்திலும் இறைவனை பூசிப்பதற்கு முன் நந்தி தேவரை பூசிப்பது நன்மை கிட்டும். எல்லோருக்கும் எல்லா நலன்களையும் பக்தியையும் வளர்க்க என்னிடமிருக்கும் நந்தி தேவன் எனக்கு இணையான பெருமையுடையவன் ஆதலால் நான் இரண்டாம் சிவவேடம் தரித்து பூவுலகில் கர்மத்தை பரவ செயகிறேன் என்று சிவ பெருமான் கூறியுள்ளார்.

சிவன் திருமுன் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையணிவித்து நெய் விளக்கிட்டு வெல்லம் கலந்த அரிசி நிவேனம் செய்யவேண்டும். பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், சர்க்கரை, எண்ணை, சந்தனம், வில்லவம், மல்லிகைபூ, செந்தாமரைபூ, வென்தாமரைபூ, எலுமிச்சை, துளசி போன்றவற்றில் நன்மை கிட்டும். நந்தி தேவருக்கு தீபாராதணை முடிந்தபிறகு மூலவருக்கு தீபாராதணை நடைபெறும். நந்தி தேவரின் பின்பக்கத்திலிருநது இரண்டு கொம்புகளிடைய நின்று தீபாராதணை பார்த்தால் சகலதோஷமும் துன்பம் நீங்கி இன்பம் எய்துவர். மலடு நீங்கி மகபேறு பெறுவர். கடன் நீங்கி செல்வம் பெருகுவர்,. நோய் நீங்கி நலம் பெறுவர். அறியாமை நீங்கி ஞானம் பெறுவர். பாவம் தொலைத்து புண்ணியம் பெறுவர். பிறவி ஒழிந்து முக்தி அடைவர். சகல செளவ்பாக்கியங்களையையும் பெற்று முடிவில் மோட்சத்தையும் சொர்க்கத்தையையும் அடைவர்.

எல்லாம்வல்ல இறைவனை போற்றி ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு அனைத்து அரண்களும் கிடைக்கும் என்பதை ஓலைச்சுவடிகளின் ஆதாரங்களிலிருந்து எடுத்து சொல்லப்படுகிறது.