திருக்கோயில் வழிபாட்டு முறை
 
குளித்து சுத்தமாக கோயிலுக்கு போக வேண்டும். வெறுங்கையோடு செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ இவற்றை வாங்கி செல்ல வேண்டும்.
சிவன் கோயில் என்றால் வில்வத்தாலும், பெருமாள் கோயில் என்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
கொடிமரத்துக்கு அப்பால் விழந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். கிழக்கு அல்லது வடக்கில் கால் நீட்டல் கூடாது.
பிள்ளையார் சந்நிதியில் தலையில் மூன்று முறை கொட்டிக்கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.
மூலவருக்கு அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது. அபிஷேகம் கண்டால் அலங்காரம் பார்க்க வேண்டும்.
நேரே மூலஸ்தானம் சென்று மூலவரை தரிசித்து விட்டு மற்ற பிரகாரங்களில் உள்ள தெய்வங்களை வழிபட வேண்டும்.
நமது வேண்டுதல்களையெல்லாம் கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.
ஆலயத்தினுள் ஒருவரை ஒருவர் கும்பிட கூடாது. கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரா சேரும்.
சிவன் கோயிலில் காலபைரவரையும், பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபாட்டால் செய்வினை தோசங்கள் அணுகாது.
கோயிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டுக்கு செல்ல வேண்டும்.
தீபம் ஏற்றுதல்
 
காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்.
எவர்சில்வர் விளக்கு ஆகாது.
2 திரியை சேர்த்து முறுக்கி ஏற்றுவது உத்தமம்.
தீபத்தை கிழக்கு, மேற்கு,வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும்.
தெற்கு திசை எமனுடைய திசை என்பதால் தெற்கு பார்த்து தீபம் ஏற்றகூடாது.
1 திரி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இறுக்க வேண்டும்.
புதிய மஞ்சள் துணி திரிபோட்டு தீபமேற்றினால் செய்வினை, பில்லி சூனியம், பேய், பிசாசு அண்டாது.
நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜையறையில் வைக்க நல்லது.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.
தீபம் ஏற்றுதலும் அதன் பலன்களும்
 
தீபம் பலன்கள்
பஞ்சு துணி போட்டு தீபமேற்றினால் மங்களம்
வாழைத்தண்டு திரி புத்திர பாக்கியம்
பட்டு நூல் திரி எல்லா வித சுபங்களும்
ஆமணக்கு எணணெய் தீபம் அனைத்து செல்வங்களும்
தேங்காய் எணணெய் தீபம் தேக ஆரோக்கியம்
இலுப்ப எணணெய் தீபம் செல்வம்
தாமரை லஷ்மி கடாட்சம்
நெய் தீபம் சகல சௌபாக்கியம்
வெண்கல விளக்கு பாவம் தீரும்
அகல் விளக்கு சக்தி தரும்