சித்ரா பௌர்ணமி பற்றிய புகைப்படங்கள்
சித்ரா பௌர்ணமி
 
திருச்செங்கோடு திருமலையில் நடைபெறும் விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமி விழாவும் மிகவும் முக்கியமான ஒரு விழாவாகும். இவ்விழாவின்போது அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கு சிறப்பான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும். அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மூலவர்கள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள் . அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் உற்சவ மூர்த்திகள் வசந்த மண்டபத்திலுள்ள மேடைமீது சிறப்பான அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள். அன்று இரவுவரை நாதஸ்வர இன்னிசை விழாக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது.