கேதார கெளரி விரதம் பற்றிய புகைப்படங்கள்
கேதார கெளரி விரதம்
 
சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சியே கேதார கவுரி விரதமாகும். இந்த விரத விழாவானது இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை 21ம் நாளாகக் கணக்கிட்டு ஆவணி வளர்பிறை அஷ்டமியில் இவ்விரதம் துவங்குகிறது. இந்நாட்களில் இங்குள்ள கேதார அம்பிகைக்கு காப்பு கட்டி ஒரு கலசத்தில் சிவனை எழுந்தருளச் செய்வர். சுவாமிக்கு ருத்ர திரிசதை அர்ச்சனையும், அம்பிகைக்கு லலிதா திரிசதை அர்ச்சனையும் நடக்கும். இந்நாட்களில் அம்பிகைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மலரும் சிவனுக்கு விதவிதமான இலைகளும் இட்டு 21 வகை நைவேத்யம் படைப்பர். 21ம் நாளில் கலச தீர்த்தத்தை சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு அபிஷேகம் செய்வர். அன்று சுவாமி பிருங்கி முனிவருடன் புறப்பாடாவார்.

இந்த விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்கள் இந்த விரத நாட்களில் சுவாமியைத் தரிசித்தால், கணவருடன் இணக்கமாக இருப்பர் என்பது நம்பிக்கை.