படித்திருவிழா பற்றிய புகைப்படங்கள்
படித்திருவிழா
 


படித்திருவிழா என்பது திருமலையில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்படித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்படுகிறது. இத்திருவிழா 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இறைபணி மன்றங்கள், சபைகள், சங்கங்கள், பஜனை குழுக்கள், கோஷ்டிகள், பஜனை மடங்கள் என மொத்தம் 92 குழுக்கள் சேர்ந்து இத்திருவிழாவை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இத்திருவிழாவின் போது மலையின் மீது ஏறிச்செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் முதல்படியிலிருந்து பூஜையை தொடங்கி ஒவ்வொரு படியாக மேலேறிச்சென்று 60-ம் படியில் சிறப்பு பூஜைகளை செய்து மேலே திருக்கோயில் வாயில் வரை ஏறிச்சென்று பூஜையை நிறைவு செய்வார்கள்.