நாகபஞ்சமி பற்றிய புகைப்படங்கள்
நாகபஞ்சமி
 வருடத்தில் ஒரு முறை மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் போது பக்தர்கள் மலையின் கீழே இருக்கும் பத்ரகாளியம்மன் சன்னதியில் இருந்து 1008 பால்குடங்களை எடுத்து சென்று மலைப்படிகளின் வழியாக இறைவனை முழுமனதுடன் பிரார்த்தித்து, விரதமிருந்து நாகர்பள்ளம் என்ற பகுதியில் இருக்கும் 60 அடி நீளமுள்ள ஐந்து தலைகளை உடைய மிகப் பிரமான்டமான ஆதிசேடனுக்கு அபிஷேகம் செய்து. மஞ்சள் குங்குமம் மற்றும் எலுமிச்சம்பழத்தால் அலங்காரம் செய்து நாகதேவனை வழிபடுவார்கள் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்விழாவானது ஒவ்வாரு வருடமும் ஆடி மாதம் வருகின்ற நாகபஞ்சமி தினத்தில் நடைபெறுகிறது.