நாகேஸ்வரர் பூஜை பற்றிய புகைப்படங்கள்
நாகேஸ்வரர் பூஜை
 
திருச்செங்கோடு புனிதத் திருமலையில் முதன்முதலாய் அதாவது ஆதியில் தோன்றிய கோவில் நாகேஸ்வரர் கோவிலாகும். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த நாகேஸ்வரர் கோவிலை பரமத்தியில் கோட்டை கட்டி ஆண்ட வேட்டுவராஜா அல்லாளன் இளையநாகன் என்பவர் கட்டி உள்ளார். இவரே வடகரையாற்றங்கறையில் (இன்றைய ஜேடர்பாளையம்) காவிரியை மேடேற்றி ராஜவாய்க்கால் வெட்டினர். இந்த ராஜவாய்க்கால் இன்றும் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. மேற்கண்ட நாகேஸ்வரர் சன்னதியில் கடந்த சில வருடங்களாக ஆவணிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று 1008 கலசங்கள் வைத்து யாக பூஜையும், கலச பூஜையும் சிறப்பாக நடத்தப்படு வருகிறது.

அருள்மிகு நாகேஸ்வரர் வழிபாட்டு குழுவினரால் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் 4-30 மணிமுதல் 6-00 மணி வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாகாச்சலம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற இப்பூஜையில் கலந்து கொள்ளும், நாகசர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு திருமணம் நல்ல முறையில் அமையும் என்று மக்களால் நம்பப்படுகிறது.