வைகுண்ட ஏகாதசி விழா
 
இங்கு உள்ள ஆதிகேசவப்பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசிவிழா மார்கழிமாதத்தில் நடைபெற்று வருகிறது . ராஜகோபுர நுழைவாயிலே ஆலயத்தின் வடக்கு வாயிலாக உள்ளதால் அத்தினத்தில் ஆலயத்திற்குள் வரும் அனைவருமே பரமபத வாயிலில் செல்லும் பாக்கியம் பெறுகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் வரும் இரு ஏகாதசி திதிகளிலும் பெருமாளுக்கு சிறப்பான அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு கருடவாகனத்தில் பெருமாள் வலம் வரும் விழா நடைபெற்று வருகிறது.