சிவராத்திரி வழிபாடு
 
மற்ற சிவாலயங்களைப் போலவே இங்கும் கீழே உள்ள கைலாசநாதர் ஆலயத்திலும் திருமலையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகாசிவராத்திரி தின இரவில் சிறப்பான நான்கு கால வழிபாடு நடைபெறுகிறது. கைலாசநாதர் ஆலயத்தில் இரவு 12 மணிக்கு லிங்கோத்பவருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையைத் தரிசிப்பது மிகவும் சிறப்பாகக் கருதப் படுகிறது. மலையிலும் அர்த்தநாரீஸ்வரர், நாகேஸ்வரர் மற்றும் பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஒவ்வொரு மகாசிவராத்திரி இரவும் பக்தர்கள் வசதிக்காக இரவு முழுவதும் மலைக்கோயில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை மட்டுமல்லாமல் பெருமளையும் சேர்ந்து தரிசிக்கும் பாக்கியம் இங்கு நமக்குக் கிடைக்கிறது.