திருவிழாக்கள்
 
பொதுமக்களின் வாழ்வில் சோர்வினை போக்கி இன்பத்தை கொடுப்பது விழாக்கள். விழாக்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஆண்டின் வைகாசி மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை விழாக்கள் நடைபெறுவது உண்டு. இதை பிரமோற்சவம், மஹாத்ஷவம் என்றும் கூறலாம். இதே போல் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழியாகவும், மலைப்பாதை வழியாகவும் சென்று அம்மையப்பனை தரிசிக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கருதப்படுகிறது.
திருக்கொடிமாட செங்குன்றூர் என போற்றப்படும் இங்கு மாதந்தோறும் கீழ்கண்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன
மாதந்தோறும் நடைபெறும் திருவிழாக்கள்
மாதங்கள் திருவிழாக்கள்
சித்திரை சித்திரா பெளர்ணமி
வைகாசி வைகாசி விசாகப்பெருந்திருவிழா, பத்திரகாளியம்மன் திருவிழா
ஆனி நடராஜர் திருமஞ்சனம்
ஆவணி விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி மலைக்கோயில் கெளரி விரதம், நவராத்திரி விரதம்
ஐப்பசி பெரிய மாரியம்மன் திருவிழா
கார்த்திகை திருமலையில் கார்த்திகை தீபம்
மார்கழி ஆருத்ரா தரிசனம்
தை திருமலை படி திருவிழா
மாசி மாசி மகம், சிவராத்திரி திருவிழா
பங்குனி உத்திரவிழா