சிறப்பம்சங்கள்
ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.
உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்
ஒவ்வொரு கிரகணத்தின் போதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பின்பு கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும், ஆனால் இங்கு கிரகணத்தின் போது கோவில் மூடப்படமாட்டாது.
அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற ஆத்மார்த்த மரகதலிங்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.
வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.
அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.
உலகிலேயே வேறு எங்கும் காணாத புதுமையாய் அர்த்தநாரீஸ்வரரின் அர்ச்சனையின் போது ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்சிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பு.
வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.
வேறு எந்த சிவதலங்களிலும் இல்லாதவாறு இங்கு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.
பீடமே இல்லாமல் மூலவர் சிலை அமைந்திருப்பது வேறெங்கும் காணவியலாக் காட்சியாகும்
ராஜகோபுரம் வடக்கு நோக்கி இருந்தாலும் மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சமாகும்.
தல வருட்சமாக இலுப்பை மரம் உள்ள சிவதலம்
வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார்.
தமிழக அரசால் தொடங்கப்பட்ட அன்னதானதிட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஒரு ஆண்டிற்கு தேவையான நிதி நன்கொடையாக சேர்ந்தது இக்கோயிலிலே.
17-1-1964-ல் திருமலையில் கோடி அர்ச்சனை நடைபெற்றதாக திருச்செங்கோடு மான்மியம் மூலம் அறியப்படுகிறது.