வழிபாடு (பூஜைகள்)
 
இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு காலை பூஜை (காலை 6-7மணி வரை) உச்சி காலம் (12-1 மணி வரை) மாலை பூஜை (4-5 மணி வரை) நடைபெற்று வருகின்றது. காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டு இன்றும் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆத்மார்த்த மரகதலிங்கத்திற்கு முதலில் அதிகாலையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரிசையாக எண்ணை காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளைநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனை பட்டினாலும், பல வகை மலர்களாலும் அலங்காரம் செய்வர். அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனுக்கு முதலில் மூலமந்திரங்களில் வடமொழியில் அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதனை ஆவாகனம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இறைவனுக்கு வெறும் அன்னம், பாயச அன்னம், எள் அன்னம், பயறு அன்னம், சக்கரை அன்னம் போன்ற அன்னங்களை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது.