கோயில் நிர்வக அமைப்பு
 
திருச்செங்கோடு திருக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்டதாகும், கோயில் செயல் அலுவலராலும் அறங்காவலர் குழுவாலும் இக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவிலுக்கு உண்டியல், மலைப்பாதை குத்தகை தொகை, கோயில் பேருந்து மூலம் கிடைக்கும் வருமானம், அர்ச்சணை சீட்டுகள் மூலமாக கிடைக்கும் தொகை, கட்டிடங்கள், காலி மனைகள், வாடகை மற்றும் உரிமை குத்தகைகள் மூலம் கிடைக்கும் வருமானங்கள் மூலமாக கோயில் நிர்வாகம் மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.