மலைப்பாதை அமைப்பும் பேருந்து வசதியும்
 
உமையொருபாகனாக உலகிலேயே இங்கு மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இறைவவனை வழிபட படிகள் வழியாக மட்டுமே செல்லவேண்டியிருந்தது. 1988-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வாகனங்களின் மூலமாகவும் செல்ல வழிசெய்யப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் மலையின் பாதை ஆரம்பமாகிறது. இச்சாலை பக்தர்களின் போக்குவரத்துக்கு உயிர்மூச்சாய் அமைந்துள்ளது.
இச்சாலையின் கால்கோல் விழா 1984-ல் நடைபெற்றது சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இப்பாதையில் 15-05-1988 முதல் தனியார் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. 16-09-1988 முதல் கோவில் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டும் வருகின்றன. இப்பேருந்து வழியாக மேலே செல்லும் போது எத்திற்கு பார்த்தாலும் உள்ளத்தை அள்ளிக்கொள்ளும் பச்சைபசேலென்ற இயற்கை காட்சியும், தூய உணர்வும், இளம் தென்றல் காற்றும் நம் மனதிற்கு மிக மிக அருமையானதாக இருக்கும்.
மலைப்பாதை மதிப்பீட்டு தொகை ரூ. 60 லட்சம்
சாலையின் மொத்த நீளம் 2,550 மீட்டர்
சாலையின் அகலம் 6 மீட்டர்
கோவிலின் உயரம் 155.60 மீட்டர்
அடிமட்டத்திலிருந்து மொத்த உயரம் 173.81 மீட்டர்
கோபுரம் உயரம் 18.21 மீட்டர்