இறை வழிபாடு
 
முதலில் ஸ்தூல லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட்டு பிறகு கோவிலின் உட்புகுந்து பலி பீடத்தின் அருகே நின்று ஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். பின் கர்ப்பக கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஏற்றவாறு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று வழிபடவேண்டும். பிறகு நந்தி தேவரையும் துவாரபாலகரையும் வணங்கி கற்பூர ஒளியில் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு நடராஜர், சிவகாமி அம்மை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய தெய்வங்களை முறையாக வணங்கவேண்டும். இறுதியாக நந்தி தேவரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து நமது வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.
வழிபாட்டின் பலன்கள்
 
அதிகாலை செய்யும் ஆலய வழிபாடு முதல் நாள் செய்த பாவத்தை போக்கும். மாலை நேரத்தில் பிரதோசகாலத்தில் செய்யப்படும் வழிபாடு நம் பிறவி தோறும் செயயும் பாவங்களை போக்கிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.