உச்சிபிள்ளையார் கும்பாபி்ஷேகம்
பாண்டீஸ்வரர் ஆலயம் (வரடிக்கல்)
 
தரைமட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் மலைக்கோயிலின் உச்சியில் அமைந்துள்ள இங்கு பிள்ளையார் (கணபதி) சிலையும் உள்ளதால் இதனை மக்கள் உச்சி பிள்ளையார் கோவில் என்றும் கூறுவர். முன்பொரு காலத்தில் மேரு மலையின் சிகரங்களில் ஒன்றாகிய சந்தனபாக்கியம் வழங்கிடும் வல்லமை வாய்ந்த வந்தியபாடான சிகரத்தின் அருகே ஒரு சிவலிங்கத்தை நிறுவி பிரமனும், திருமாலும் வழிபட்டு வந்தனர். அந்த லிங்கத்திற்கு வந்தீசர் என பெயரிட்டனர். நாரத முனிவரின் வேண்டுகோளின் படி சூரபன்மன் என்பவன் அந்த சிகரத்தையும் பிரமதேவன் பூசித்த வந்த சிவலிங்கத்தையும் எடுத்து வந்து நாககிரியின் உச்சியில் வைத்து வழிபட்டு வந்தான்.

கிபி 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகம் முழுவதும் நிலவி வந்த பஞ்சத்தை போக்க பாண்டிய மன்னன் பாண்டிய நாட்டிலிருந்து கொங்குநாடு வந்து சிவபெருமானை வணங்கி நாடு முழுவதும் மழை பெய்ய செய்ததாக அறியப்படுகிறது. அதனைப் போற்றும் விதமாக இங்கு ஓர் நினைவாலையம் நிறுவ விரும்பினான். அவன் தன் நினைவாலையமாக வந்திச்சிலையின் அருகே ஒரு கோயில் கட்டினான். அதன் உள்ளே சிவலிங்கம் ஒன்றை நிறுவி அகல் விளக்கொன்றையும் அமைத்து வழிபட்டான். அன்று முதல் இச்சிகரம் பாண்டீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
வரடிக்கல் - வழிபடும் முறைகள்
 
மிகக்குறுகிய பாதையை உடைய இப்பகுதியை சுற்றி வருதல் என்பது இங்கு நடைபெறும் பிராத்தனை வகையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதர்கள் விரைவில் குழந்தைப்பேரினை அடைவர் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆனால் அக்காலமக்களால் இம்முறை மிக கடினமாக கடைபிடிக்கப்பட்டது. அதாவது விண்மீன் கூடிய நன்நாளில் முதலில் குமாரதீர்த்தில் நீராடி பின்னர் மலையிலிருந்து கீழ்வந்து நாககிரியை மும்முறை வலம் வரவேண்டும், மறுபடியும் மலை மேல் சென்று அம்மையப்பனை வழிபட்டு, பிறகு வந்தீசுவரர் என்னும் பாண்டீஸ்வரரை வழிபடவேண்டும். அதன் பிறகு இந்த குன்றினை மூன்று முறை வலம் வரவேண்டும். இதை ஒரே நாளில் செய்து முடித்து அவ்வந்தீசுவரன் எனும் பாண்டீஸ்வரரை வழிபடவேண்டும். பிறகு தலவிருட்சத்தின் நிழலில் தங்கி இருந்து அன்னதானம், சொர்ணதானம், வத்திரதானம் செயதால் தாம் நினைத்தபடி புத்திர பாக்கியம் பெறுவர் என அன்றைய மக்களால் நம்பப்பட்டது.