திருமலை கும்பாபி்ஷேகம்
கோபுரம்
 

திருமலையின் வடக்கு பார்த்த வண்ணம் கம்பீர தோற்றத்துடன் உள்ள இராஜ கோபுரத்திற்கு கருங்கல்லால் ஆன அடித்தளம் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்த திரியம்பக உடையார் என்பவரால் கி.பி.1521 -ல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 29 ஆண்டுகளுக்கு பிறகு சதாசிவராயரின் ஆட்சியில் நரசிங்கராமாச்சி என்பவரால் கிபி 1550ல் இக்கோபுரத்தின் மேல் பகுதி செங்கற் பணிகள் முடிக்கப்பட்டு குளிகையும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு குமரமங்கலம் நாகமலைகவுண்டரின் குமாரர் சடையப்பகவுண்டர் என்பவர் மக்களின் பொருளுதவியுடன் இக்கோபுர திருப்பணிகளை செய்து முடித்தார். மேற்கண்ட செய்திகள் திருச்செங்கோட்டு திருப்பணி மாலை கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது.

இக்கோபுரம் 475 ஆண்டுகள் பழமையானது. இக்கோபுரத்தில் செய்யபபட்டுள்ள சிற்ப வேலைபாடுகள் நமது முன்னோர்களின் சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோபுரம் 84.5 அடி (18.21 மீட்டர்) உயரமுடையதாய் ஐந்து நிலைகளுடன் மிக கம்பீரமாய் காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பாகும்.