மண்டபங்கள்
 
திருமலையின் படிகளின் வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் பக்தர்கள் இளைப்பாறவும், வழி முழுவதும் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில :
செங்குந்தமுதலியார் மண்டபம் காளத்தி சுவாமிகள் மண்டபம் தைலி மண்டபம் சிங்க மண்டபம்
நாடார் மண்டபம் செட்டிக்கவுண்டர் மண்டபம் தேவரடியார் மண்டபம் இளைப்பாற்றி மண்டபம்
கோபுர வாயில் மண்டபம் நிறுத்த (அல்லது) ஆமை மண்டபம் விலாச மண்டபம் குகை மண்டபம்
திருமுடியார் மண்டபம் கோடி அர்ச்சணை மண்டபம் சிங்கத்தூண் மண்டபம் அறுபதாம் படி மண்டபம்
திருமலையில் உள்ள மண்டபங்களின் உயரங்கள் தரைமட்டத்திலிருந்து அதாவது மலைபாதையின் தொடக்கத்திலிருந்து
மண்டபங்கள் உயரம்
தரை நாலுகால் மண்டபம் தொடக்கம்
திருகாளத்தி அடிகள் மண்டபம் 70 அடி
திருமுடியார் மண்டபம் 82 அடி
கார்காத்த மண்டபம் 147 அடி
செங்குந்த முதலியார் மண்டபம் 214 அடி
நாட்டுக் கவுண்டர்கள் சிங்கமண்டபம் 315 அடி
செல்வ விநாயகர் மண்டபம் 347 அடி
சான்றோர் குல நாடார் மண்டபம் 450 அடி
பைரவர் தீர்த்தம் 465 அடி
செட்டிக்கவுண்டர் மண்டபம் 516 அடி
தேவரடியார் மண்டபம் 567 அடி
மலைக்கோவில் வாயில் 650 அடி
பாண்டீஸ்வரன் கோவில் 1075 அடி
திருமலையின் மேலுள்ள மண்டபத்தை கட்டியவர்கள்
மண்டபங்கள் கட்டியவர்கள்
செங்குந்தர் மண்டபம் நல்லையன்
காளத்தி சுவாமிகள் மண்டபம் தொண்டைநாட்டு திருகாளத்தியில் வாழ்ந்த சிவபிரகாச சுவாமிகள்
திருமுடியார் மண்டபம் சேனாதிபதி வேலடிகள்
தைலி மண்டபம் தைலி
செங்குந்த முதலியார் மண்டபம் இராசீபுரத்துச்செங்குந்தர் சின்ன முதலியார்
சிங்க மண்டபம் காங்கேயர்கள் என்ற சிறப்பிற்குரிய வேளாளர்கள்
அறுபதாம் படிகள் மண்டபம் மோரூர் கண்ணங்குல கொங்கு வேளாளர்கள்
அறுபதாம் படிகள் வேட்டுவ கவுண்டர்கள்
செட்டிக் கவுண்டர்கள் மண்டபம் குமரமங்கலம் மசவேலக்கவுண்டரின் மனைவி வள்ளியம்மாள் என்பவரால் துவக்கப்பட்டு செட்டிக்கவுண்டரால் கட்டி முடிக்கப்பட்டது
தேவரடியார் மண்டபம் குருவம்ம மாணிக்கம் என்ற கணிகைய்யர்
இளைப்பாற்றி மண்டபம் மோரூர் நல்லதம்பி காங்கேயன்
வடக்குப்புற நுழைவுவாயில் மண்டபம் இராசிபுரம்-மல்லசமுத்திரம் நாட்டுக்கவுண்டர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டது