ஸ்தல விருட்சம்
 
பூர்வகாலத்தில் திருபார்கடல் கடையப்பட்ட போது அதில் உண்ட அழுத்த திவலைகள் பூமியில் சிதறின. அதனால் தோன்றிய கற்பகவிருட்சங்களே தலவிருட்சம் என்று கூறுவர். இவை அனைத்தும் நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்களால் பெரிதும் போற்றப்பட்டன. நமது கோயிலின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும் மேலும் பெருமாள் கோயிலுக்கு புன்னைமரமும் தலவிருட்சமாக அமைந்துள்ளது. இது நமது குறிஞ்சி நாட்டை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.