மலையின் மறு பெயர்கள்
 
சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரி முதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது. இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும் சதயநட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர். இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும்.

மணியுகும் சிகரமுத் துண்டமாயது சேதுமலி யிலங்கா புரிமுனி
ரணி திருக்கோண மலையென வமைந்தன நாகவசலந் தமிழ்க்கொங்கு நாடினை
தனிக்கிரி மங்கையங்கனும் வேலனும் இருந்துநல் வரமருள் வதாய்ப்
பணியுக மனந்தம் பரவியது கந்தப்பரப் புற்றுமழி

என்று தேவாரத் திருப்பதிகத்தில் போற்றப்படும் இத்திருமலையை ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக காட்சியளிக்கும்.