திருச்செங்கோட்டின் சிறப்பு
 
விசைத்தறி கூடங்களின் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே முதலிடம் பெறுவது திருச்செங்கோடு தாலுக்கா ஆகும்
இந்தியாவிலேயே ஆழ்துளை கிணறு தோன்டும் ரிக் வாகன மிகுதியில் திருச்செங்கோடு தான் முண்ணனி வகிக்கிறது. சுமார் 5000 ரிக் வாகனங்கள் இந்தியா முழுமைக்கும் சென்று தண்ணீர் பஞ்சத்தை போக்குகிறது.
மோட்டார் வாகன தொழிலில் திருச்செங்கோடு புகழ்பெற்று விளங்குகிறது.
தமிழகத்திலேயே அதிக பொறியியல் கல்லூரிகள் கொண்ட ஒரே மாவட்டம் நாமக்கல் ஆகும். இந்நகரில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள்
பொறியியல் கல்லுரிகளில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள மாவட்டம்.
மினிபஸ் எண்ணிக்கையில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாவட்டம்
அங்கன் வாடி சத்துமாவு உற்பத்தியில் முதலிடம்
தொழில் வல்லுநர்களால் குட்டிபம்பாய் என்று அழைக்கப்படுகிற ஊர்
காந்தியடிகள் இரண்டு முறை வருகை தந்த ஊர்
வங்கிகளின் பணப்புழக்கத்தில் இந்திய அளவில் பெயர் பெற்ற ஊர்
கண்ணகிக்கு 58 ஆண்டுகளாக விழா எடுக்கும் நகரம்
இந்திய முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி சில காலம் வாழ்ந்த ஊர்
பொரிக்கு பெயர் பெற்ற ஊர்
நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சி
தமிழகத்தின் மிகப்பெரிய தாலுக்கா
திருச்செங்கோட்டிற்கு வருகைதந்த தேசதலைவர்கள்
 
தேசதலைவர்கள் வருகை தேதி
காந்தியடிகள் 21/03/1925 மற்றும் 13/02/1934
கஸ்துாரிபாய் காந்தி 18/12/1932
ஜவகர்ளால் நேரு 11/10/1936
இராஜேந்திர பிரசாத் 24/10/1934
வல்லபாய் படேல் 10/09/1929
காமராஜர் 09/02/1975
பெரியார் 06/02/1925
லால்பகதுார் சாஸ்திரி 09/11/1953