2013 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவானது வைகாசி மாதம் 2-ஆம் நாள் (16/05/2013) முதல் வைகாசி மாதம்   15-ஆம் நாள் (29/05/2013) வரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அது சமயம் தாங்களும் மற்றும் தங்கள் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொண்டு அம்மையப்பனின் அருள்பெற்று நலமோடு வளமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாற வேண்டுகிறோம்.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாவை பற்றிய அரிய புகைப்படங்களை நமது இணையதளத்தில் எப்பொழுதும் போல் கண்டு மகிழுங்கள்.

கடந்த 9 ஆண்டுகளாக இந்த இணையதளம் முழுமையான வெற்றிபெற எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



15/04/2013 ரத விநாயகர் பூஜை
25/04/2013 ஆயக்கால் நடுதல்
02/05/2013 பத்ரகாளியம்மன் கொடியேற்றம்
10/05/2013 பத்ரகாளியம்மன் தேரோட்டம்
15/05/2013 கிராமசாந்தி
16/05/2013 - 1ஆம் திருவிழா திருமலையில் கொடியேற்றம்
17, 18/05/2013 - 2ஆம், 3ஆம் திருவிழா திருமலையில் இறைவனுக்கு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்
19/05/2013 - 4ஆம் திருவிழா அருள்மிகு ஆதிகேசபெருமாளுக்கு கொடியேற்றம், சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளள்
24/05/2013 - 9ஆம் திருவிழா அம்மையப்பர் மற்றும் செங்கோட்டுவேலவர் திருக்கல்யாண உற்சவம், சுவாமிகள் திருத்தேர் எழுந்தருளல், அருள்மிகு விநாயகர் மற்றும் செங்கோட்டு வேலவர் திருத்தேர்கள் வடம் பிடித்தல், அருள்மிகு ஆதிகேசபெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
25, 26/05/2013 - 10ஆம், 11ஆம் திருவிழா அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல்
27/06/2013 - 12ஆம் திருவிழா அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் திருத்தேர்கள் நிலை சேர்த்தல்
29/06/2013 - 14ஆம் திருவிழா அதிகாலையில் சுவாமிகள் திருமலைக்கு எழுந்தருளள்